சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் பிரிட்டன் இளவரசர் ஃபிலிப்!

பிரிட்டன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் சாலை விபத்தில் சிக்கியது. இதில் இளவரசர் பிலிப் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் பிரிட்டன் இளவரசர் ஃபிலிப்!

லண்டன்: பிரிட்டன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் சாலை விபத்தில் சிக்கியது. இதில் இளவரசர் பிலிப் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான ஃபிலிப்(97) பிரிட்டனின் சாண்டிரினாம் எஸ்டேட் பகுதியில் தமது பணியாளர்கள் 2 பேருடன் காரில் நேற்று வியாழக்கிழமை (ஜன.17) கிழக்கு பிரிட்டன் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, சண்டிங்கம் எஸ்டேட் அருகே சென்றுகொண்டிருந்த போது வளைவில் முந்த முயன்ற ஃபிலிப்பின் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இருந்து இளவரசர் ஃபிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரும், மீட்புப்படையினரும் இளவரசர் மற்றும் காயமடைந்த மற்றவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இளவரசரை பரிசோதித்த மருத்துவர்கள் இளவரசர் நலமாக உள்ளதாகவும், அவருக்கு சிறிய காயம் கூட ஏற்பட வில்லை என்று தெரிவித்தனர். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனையும் தற்போது உறுதிபடுத்தியுள்ளது.

இளவரசர் ஃபிலிப் விபத்தில் சிக்கிய செய்தி வேகமாக பரவத் தொடங்கியதும் பிரிட்டன் மக்கள் உட்பட அரச குடும்பத்தினர் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த பிரார்த்தனையின் பயனாகவே இளவரசர் ஃபிலிப் காயமின்றி உயிர் பிழைத்திருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, மனைவி மிட்செல் ஒபாமாவுடன் சுற்றுப்பயணம் செய்ததார். அப்போது இளவரசர் ஃபிலிப் இருவரையும் தனது காரில் அவரே ஓட்டிச்சென்று மதிய விருந்துக்கு அழைத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com