விடியோ கேம் விபத்தை உண்மை என்று நம்பி ட்வீட் போட்ட அரசியல் தலைவர் 

விடியோ கேம் விபத்தை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ட்வீட் போட்ட சம்பவம் அனைவரையும் நகைப்புக்குள்ளாகியுள்ளது.
விடியோ கேம் விபத்தை உண்மை என்று நம்பி ட்வீட் போட்ட அரசியல் தலைவர் 

இஸ்லாமாபாத்: விடியோ கேம் விபத்தை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ட்வீட் போட்ட சம்பவம் அனைவரையும் நகைப்புக்குள்ளாகியுள்ளது.

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 5  என்ற விடியோ கேம் இணையத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த விளையாட்டில் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பும் போது எரிபொருள் நிரப்பிய லாரி மீது மோதுவது போல வந்து விலகுவதாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கான விளம்பரமும் இணையத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

ஆனால் இதனை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ட்வீட் போட்ட சம்பவம் அனைவரையும் நகைப்புக்குள்ளாகியுள்ளது. 

பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியின் பொதுச் செயலாளர் குர்ரம் நவாஸ். இவர் குறிப்பிட்ட விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பி விட்டதாகவும், அதற்கு விமானியின் சாமர்த்தியமே காரணம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பலரும் இது விடியோ கேம் ஒன்றில் வரும் விபத்து என்று எடுத்துச் சொன்ன பின்னர் அவர் தனது பதிவை அவர் நீக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com