வாஷிங்டனில் கனமழையால் வெள்ளம்

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் பலத்த மழை பெய்து வருவதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மின்சாரம் மற்றும்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பலத்த மழையைத் தொடர்ந்து வெள்ளம் புகுந்த முக்கிய சாலை.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பலத்த மழையைத் தொடர்ந்து வெள்ளம் புகுந்த முக்கிய சாலை.


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் பலத்த மழை பெய்து வருவதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மின்சாரம் மற்றும் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதுதொடர்பாக தேசிய வானிலை மையம் (என்டபிள்யூஎஸ்) சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. ரொனால்ட் ரீகன் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் மட்டும் 1 மணி நேரத்தில் 83 மி.மீ. மழை பெய்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் மூழ்கும் கார்கள் மீது மக்கள் நின்றுகொண்டிருப்பது போன்ற விடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வாஷிங்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேலே இருந்து சிறிய துவாரம் வழியாக மழை நீர் கொட்டும் காட்சியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வெள்ளை மாளிகை தரை தளத்தில் வெள்ளம் புகுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவசர அழைப்பு பிரிவை மக்கள் உதவிக்காக அழைத்து வருகின்றனர். உயிரிழப்புகள் எதுவும் நேரிடவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com