கத்தார்: போர் விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதல்

கத்தார் நாட்டில் பயிற்சியின்போது போர் விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.


கத்தார் நாட்டில் பயிற்சியின்போது போர் விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
கத்தார் நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள் புதன்கிழமை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது 2 போர் விமானங்கள் எதிர்பாராதவிதமாக நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
அந்த விமானங்களை ஓட்டிய விமானிகள், அவசர பாதுகாப்பு கருவியை இயக்கி உயிர் தப்பினர்.
விபத்துக்குள்ளான விமானங்கள், எந்த ரகத்தைச் சேர்ந்தவை என்பது குறித்து கத்தார் தெரிவிக்கவில்லை.
அரேபிய வளைகுடா பகுதியில் உள்ள சிறிய நாடான கத்தாரில், அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து அமெரிக்க விமானப்படை அதிகாரி கிறிஸ்டின் மிலிட் கூறுகையில், "போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து தெரியும். ஆனால் இதற்கு எங்களிடம் இருந்து கத்தார் எந்த உதவியையும் கோரவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com