டிரம்ப்  இம்ரான் கான் 22ஆம் தேதி சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரும் 22ஆம் தேதி சந்தித்துப் பேச இருக்கிறார்.
டிரம்ப்  இம்ரான் கான் 22ஆம் தேதி சந்திப்பு


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரும் 22ஆம் தேதி சந்தித்துப் பேச இருக்கிறார். இதனை அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்ப்  இம்ரான் கான் இடையிலான சந்திப்பு, வெள்ளை மாளிகையில் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் மூலம் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு மேலும் அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க இருக்கின்றனர். ஆசியப் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சு நடத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக அமெரிக்காபாகிஸ்தான் உறவு சிறப்பாக இல்லை. பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்ந்து செயல்படுவதால், அந்த நாட்டுக்கான சில நிதியுதவிகளை அமெரிக்கா நிறுத்தியது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து டிரம்பிடம் இம்ரான் கான் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட பாகிஸ்தான் நலன்சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் இம்ரான் கான் பேசுவார் என்று தெரிகிறது.
முன்னதாக, இரு நாள்கள்களுக்கு முன்பே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்த சந்திப்பு குறித்து தகவல் வெளியிட்டது. ஆனால், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்த பிறகுதான் பயணம் தொடர்பான முழுவிவரங்களையும் வெளியிட முடியும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.
இம்ரான் கானுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி உள்ளிட்ட பலரும் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். அண்மைக்காலமாக பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் இந்தியாவின் கருத்துடன் அமெரிக்கா இணக்கம் காட்டி வருகிறது. இது பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிப்பதாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இம்ரான் கானின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com