சுடச்சுட

  

  மசூதி தாக்குதல் எதிரொலி: பொதுமக்களின் துப்பாக்கிகள் அரசிடம் ஒப்படைப்பு  

  By  கிறைஸ்ட்சர்ச்,  |   Published on : 14th July 2019 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  GUN

  நியூஸிலாந்தின் இரு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் எதிரொலியாக, பொதுமக்கள் தங்களிடமிருந்த இயந்திரத் துப்பாக்கிகளை அரசிடம் சனிக்கிழமை ஒப்படைக்கத் தொடங்கினர்.
   28 வயது ஆஸ்திரேலியரான பிரென்டன் டாரென்ட், நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 51 பேர் பலியாகினர்.
   நியூஸிலாந்தில் அந்தத் தாக்குதல் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. நாட்டில் இதுபோன்ற தாக்குதல்கள் இனியும் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், சக்தி வாய்ந்த தானியங்கி துப்பாக்கிகளை பொதுமக்கள் வைத்திருப்பதற்கு அந்த நாடு அரசு தடை விதித்தது.
   மேலும், ஏற்கெனவே அந்த வகை துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களிடமிருந்து அவற்றை விலைக்கு வாங்கும் திட்டத்தையும் அரசு அறிவித்தது.
   இந்த நிலையில், தானியங்கி துப்பாக்கிகளை வாபஸ் பெறும் திட்டம் சனிக்கிழமை அமலுக்கு வந்தது.
   அந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட தானியங்கி துப்பாக்கிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
   ஆயுதம் தாங்கிய போலீஸாரின் பாதுகாப்புடன் நடைபெற்ற அந்த ஒப்படைப்பு நிகழ்ச்சிகளில், 169 பேர் தங்களிடமிருந்த 224 துப்பாக்கிகளையும், 217 துப்பாக்கி பாகங்கள் மற்றும் துணை பாகங்களையும் ஒப்படைத்தனர்.
   அதற்காக அவர்களுக்கு 2.9 லட்சம் டாலர் (சுமார் ரூ.1.98 கோடி) திருப்பியளிக்கப்பட்டது.
   பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட துப்பாக்கிகளும், துணைப் பொருள்களும் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai