சுடச்சுட

  
  facebook

  பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களைப் பாதுகாக்கத் தவறிய வழக்கில், முகநூல் நிறுவனத்துக்கு அமெரிக்க வர்த்தக ஒழுங்காற்றுக் குழு 500 கோடி டாலர் (சுமார் ரூ.34,280 கோடி) அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
   இதுகுறித்து அமெரிக்காவில் வெளியாகும் "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
   முகநூல் பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களை வர்த்தக ரீதியில் பகிர்ந்து கொள்வதற்காக அந்த சமூக வலைதள நிறுவனம் பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது குறித்து அமெரிக்காவின் வர்த்தக ஒழுங்காற்றுக் குழு (எஃப்டிசி) கடந்த 2011-ஆம் ஆண்டு விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனம் முகநூல் வலைளத்தில் ஊடுருவி லட்சக்கணக்கான அதன் பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடியதாக அண்மையில் தெரிய வந்தது.
   அதையடுத்து, கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கொண்ட விசாரணையை மீண்டும் தொடர எஃப்டிசி முடிவு செய்தது.
   அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில், பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களைப் பாதுகாக்கத் தவறிய குற்றத்துக்காக முகநூல் நிறுவனத்துக்கு 500 கோடி டாலர் அபராதம் விதிக்க எஃப்டிபி அமைப்பு முடிவு செய்துள்ளது என அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. ரகசிய தகவல்கள் பாதுகாப்பு விவகாரத்தில் எஃப்டிசி அமைப்பு விதித்துள்ள அபராதத்தில் இதுதான் மிகப் பெரிய தொகை என்று கூறப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai