டிஆர் காங்கோவில் எபோலா தாக்குதல்: அமைதி காக்க அரசு அறிவுறுத்தல்

ஜனநாயக குடியரசு நாடான டிஆர் காங்கோவில் எபோலா பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, தனிநபர் சுகாதாரத்தை ஒவ்வொருவரும் பேண வேண்டும் என பொதுமக்களை அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. 
காங்கோவின் மபலாகோ கிராமத்தில் எபோலா நோய் பாதிப்பு காணப்பட்டதையடுத்து, மருந்துத் தெளிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்ட  சுகாதாரத் துறையினர் (கோப்புப் படம்).

 இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது:
கோமா நகரில் எபோலா பாதிப்பு இருப்பது முதன்முறையாக கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் இதே நகரத்தில்தான் உயிர்க்கொல்லி நோயான எபோலாவின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
தற்போது, அந்த நகரத்தில் இருந்த பாதிரியாருக்கு எபோலா பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பது கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அருகில் உள்ள புடெம்போ கிராமத்துக்கு போதனைக்காக சென்று வரும்போது இந்த பாதிப்பு தொற்றியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாதிரியாரின் ரத்த மாதிரிகளை சோதனைக்குள்படுத்தியதில் அவருக்கு எபோலா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோமா நகரத்தில் எபோலா வைரஸ் பரவுவதற்கு மிக குறைந்த அளவே வாய்ப்புகள் உள்ளன. 
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். தடுப்பூசி போடுவது உள்பட எபோலாவை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com