பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி 

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா தொடர்ந்த வழக்கின் காரணமாக சர்வதேச நீதிமன்றமானது குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்து  அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அவர் மீதான தண்டனையை மறு ஆய்வு செய்யவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டனர். அத்துடன் குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் அணுக அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச வியன்னா ஒப்பந்தப்படி தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான உரிமைகள்,  குல்பூஷண் ஜாதவுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com