ஜப்பான் "அனிமேஷன் ஸ்டுடியோ'வில் தீ 33 பேர் பலி

ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள "அனிமேஷன் ஸ்டுடியோ'வில் தீப்பற்றிய சம்பவத்தில் 33 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 
கியோட்டோவில் உள்ள அனிமேஷன் ஸ்டுடியோ கட்டடத்தில் வியாழக்கிழமை பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர்.
கியோட்டோவில் உள்ள அனிமேஷன் ஸ்டுடியோ கட்டடத்தில் வியாழக்கிழமை பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர்.

ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள "அனிமேஷன் ஸ்டுடியோ'வில் தீப்பற்றிய சம்பவத்தில் 33 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 
அந்தக் கட்டடத்தை சுற்றி எரிபொருளை ஊற்றி ஒரு நபர் தீ வைத்ததாக கூறப்படுவது குறித்தும், அதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் கூறினர். 
இதுதொடர்பாக டோக்கியோ நகர காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 
கியோட்டோ நகரில் உள்ள அந்த அனிமேஷன் ஸ்டுடியோ கட்டடத்தில் தீ தானாக பற்றியதாகத் தெரியவில்லை. அந்த மூன்றடுக்கு கட்டடத்தில் தீ வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகிறோம். இச்சம்பவத்தில் 33 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 
அந்தக் கட்டடத்தில் தீ பற்றிய பிறகு பலர் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் போனதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டடத்தில் பரவியுள்ள தீயை அணைக்கும் பணியும், அதனுள் சிக்கியிருப்போரை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
கட்டடத்தில் தீ பற்றியது தொடர்பாக உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. கட்டடத்தின் முதல் தளத்தில் வெடிச் சத்தம் ஒன்று கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து பெரும் புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் தகவலளித்தவர்கள் தெரிவித்தனர் என்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 
இதனிடையே, ஒரு நபர் தீ பற்றும் திரவம் ஒன்றை அந்தக் கட்டடத்தில் வீசிவிட்டு, அதில் தீ வைத்ததாகத் தெரியவந்துள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அதுதொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
சம்பவம் தொடர்பாக ஒரு நபர் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு, பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக ஜப்பான் அரசு செய்தி நிறுவனமான "என்ஹெச்கே' கூறியுள்ளது. சந்தேகத்துக்கிடமான அந்த நபர் எரிபொருள் ஒன்றை கட்டடத்தை சுற்றி ஊற்றி தீ வைத்ததாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 
மேலும், வெடிச் சத்தத்துடன் பெரிய அளவில் தீப்பிழம்புகள் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. 
இச்சம்பவம் தொடர்பாக உஜி நகரில் உள்ள அந்த அனிமேஷன் நிறுவனத்தின் தலைமையகத்தை தொடர்புகொண்டபோது, சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும், தற்போதைய நிலையில் வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் இரங்கல்

சம்பவம் தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே தனது சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "இது மிகவும் பயங்கரமான சம்பவமாகும். எனது கவலையை வெளிப்படுத்த வார்த்தைகள் வரவில்லை. உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com