"ஹெச்-1பி விசா கட்டணங்கள் அமெரிக்கர்களின் தொழிற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படுகிறது'

ஹெச்-1பி' விசாவுக்காக (நுழைவு இசைவு) பெறப்படும் கட்டணங்கள் அமெரிக்கர்களின் தொழிற்பயிற்சிக்கான நிதியாக பயன்படுத்தப்படுவதாக அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ் தெரிவித்துள்ளார். 
"ஹெச்-1பி விசா கட்டணங்கள் அமெரிக்கர்களின் தொழிற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படுகிறது'

ஹெச்-1பி' விசாவுக்காக (நுழைவு இசைவு) பெறப்படும் கட்டணங்கள் அமெரிக்கர்களின் தொழிற்பயிற்சிக்கான நிதியாக பயன்படுத்தப்படுவதாக அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ் தெரிவித்துள்ளார். 

"ஹெச்-1பி' நுழைவு இசைவானது, திறமையின் அடிப்படையில் வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்காக குறுகிய கால அடிப்படையில் வழங்கப்படுவதாகும். இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் அதிகமானோர் இந்த நுழைவு இசைவின் அடிப்படையில் அமெரிக்காவில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் "ஹெச்-1பி' நுழைவு இசைவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில், அந்த நுழைவு இசைவு அனுமதிக்காக பெறப்படும் கட்டணம் செலவிடப்படுவது குறித்து அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ் கூறியதாவது: 

பல்வேறு தொழில் துறைகளில் அமெரிக்கர்களின் திறனை வளர்க்கக் கூடிய வகையில் புதிதாக பயிற்சி முறை ஒன்று தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு கூடுதல் நிதி கிடைப்பதன் மூலம் போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறைகளிலும் அந்தப் பயிற்சி திட்டத்தை கொண்டுவர இயலும். 

பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் திறன்மிகு தொழிலாளர்களுக்கான தேவை இருப்பதால், இணையவெளி பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளிலும் தொழிலாளர் பயிற்சி திட்டங்களை தொழிலாளர் நலத் துறை விரிவுபடுத்துகிறது. 

அமெரிக்க தொழிலாளர் நலத் துறையானது, சுமார் 30 தொழிலாளர் பயிற்சித் திட்டங்களுக்கு ரூ.689 கோடி  மானியம் வழங்கி வருகிறது. இதற்கான நிதியானது, வெளிநாட்டுப் பணியாளர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் அவர்களுக்காக வழங்கும் "ஹெச்-1பி' நுழைவு இசைவுக்காக செலுத்தும் கட்டணங்களில் இருந்து பெறப்படுகிறது என்று வில்பர் ராஸ் கூறினார். 

ஹெச்-1பி விசா கட்டணத்தின் மூலம் திரட்டப்படும் நிதியிலிருந்து வழங்கப்படும் மானியமானது, பல்வேறு துறைகளில் பயிற்சி பெறும் சுமார் 85,000 அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 74 லட்சம் வேலை வாய்ப்புகளுக்கு திறமையான தொழிலாளர்கள் தேவைப்படும் நிலையில், இந்த பயிற்சித் திட்டமானது, அந்தத் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கும் என்று டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com