சீனாவில் மனிதஉரிமை மீறல்கள் அதிகம்: அமெரிக்கா குற்றச்சாட்டு

சமீபகாலத்தில் மனிதஉரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் சீனா முன்னிலையில் உள்ளது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 
சீனாவில் மனிதஉரிமை மீறல்கள் அதிகம்: அமெரிக்கா குற்றச்சாட்டு

சமீபகாலத்தில் மனிதஉரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் சீனா முன்னிலையில் உள்ளது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. சீனாவில் இன மற்றும் மத சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களை முன்வைத்து அமெரிக்கா இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது.

வாஷிங்டனில் மதசுதந்திரப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கூட்டம் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ இது தொடர்பாகப் பேசியதாவது:

உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீனா உள்பட பல நாடுகளில் மதசுதந்திரம் என்பது மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சீனாவில் மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள் உள்பட பல சிறுபான்மையினத்தவர் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். பலர் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலத்தில் மனிதஉரிமை மீறல்கள் அதிகம் நிகழும் நாடுகளில் சீனா முன்னிலையில் உள்ளது. சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அந்நாட்டு மக்கள் மீதும், அவர்கள் வாழ்க்கை மீதும் முழுக் கட்டுப்பாட்டையும் செலுத்துகிறது. மத வழிபாட்டை மேற்கொள்ள முயலுபவர்களுக்கு சிறைத்தண்டனை அளிக்கும் சம்பவங்களும் சீனாவில் நிகழ்ந்து வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com