2024-இல் நிலவுக்கு வீராங்கனையை அனுப்புகிறது நாசா!

2024-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்துள்ளது. இந்த முறை,
2024-இல் நிலவுக்கு வீராங்கனையை அனுப்புகிறது நாசா!


2024-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்துள்ளது. இந்த முறை, முதல்முறையாக விண்வெளி வீராங்கனையை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. 
கடந்த 1969-ஆம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை நாசா அனுப்பியது. இந்த திட்டம் அப்பல்லோ என்றழைக்கப்பட்டது. நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக நாசா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நிலவில் மனிதன் கால் பதித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். தற்போது, நிலவுக்கு மீண்டும்  மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டத்துக்கு ஆர்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலமாக, நிலவுக்கு முதல்முறையாக விண்வெளி வீராங்கனை ஒருவர் அனுப்பப்படவுள்ளார். அவருடன் விண்வெளி வீரரும் அனுப்பப்படவுள்ளார். நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சி, செவ்வாய் கிரகத்துக்கு மீண்டும் செயற்கைக்கோள் அனுப்ப எங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்.
நிலவில் இதுவரை யாரும் செல்லாத, ஆய்வுச் செய்யப்படாத பகுதியில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள பல மர்மங்களைக் கண்டுபிடிக்க இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.
நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டு நாங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நினைக்கவில்லை. செவ்வாய் கிரகத்துக்கு மீண்டும் செல்வதற்கான தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றின் சோதனை முயற்சியாக இந்தத் திட்டம் இருக்கும். நிலவில் இருக்கும் நீர், பனிக்கட்டி மற்றும் இதர இயற்கை வளங்கள் குறித்து இந்தத் திட்டத்தின் மூலம் தெரிய வரும் என்று நாசா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com