சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர் மறைவு

சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைமை இயக்குநர் யுகியா அமனோ (72) காலமானார்.
சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர் மறைவு


சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைமை இயக்குநர் யுகியா அமனோ (72) காலமானார்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவரான யுகிய அமனோ, கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலையில் சர்வதேச அணுசக்தி முகமை அமைப்பின்  தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக, 2005-ஆம் ஆண்டிலிருந்து அந்த முகமையில் ஜப்பான் பிரதிநிதியாக செயல்பட்டு வந்தார். 
2005-2006-ஆம் ஆண்டிலிருந்து அந்த முகமையின் ஆளுநர் குழு தலைவராகவும் உள்ளார். இந்தப் பொறுப்பிலிருந்து விலக திட்டமிட்டிருந்த நிலையில் அமனோ திங்கள்கிழமை காலமானதாக ஐஏஇஏ அறிவித்துள்ளது. இருப்பினும் அவரின் மரணத்துக்கு என்ன காரணம் என்பது அறிவிக்கப்படவில்லை.
அமனோவின் மரணத்தையடுத்து ஐஏஇஏ-வின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  அணு சக்தியை அமைதி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தும் இலக்கில் உறுதியாக இருந்து சாதித்து காட்டியமைக்காக ஐஏஇஏ-வுக்கு பாராட்டு தெரிவித்து அமனோ எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
டோக்கியோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த அமனோ, ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் கடந்த 1972-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பெல்ஜியம், பிரான்ஸ், லாவோஸ், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்க நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com