Enable Javscript for better performance
இலங்கைக்கு அனுப்பப்பட்ட சரக்குப்பெட்டகங்களில் மனித உறுப்புகள் : பிரிட்டன் அரசு விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    இலங்கைக்கு அனுப்பப்பட்ட சரக்குப்பெட்டகங்களில் மனித உறுப்புகள் : பிரிட்டன் அரசு விசாரணை

    By DIN  |   Published on : 25th July 2019 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    contain

    பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சரக்குப்பெட்டகங்களில் ஒன்று.


    இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப் பொருள்கள் அடங்கிய சரக்குப்பெட்டகங்களில் மனித உறுப்புகள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து பிரிட்டன் அரசு விசாரணை தொடங்கியுள்ளது.
    இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
    மறுசுழற்சி செய்யக் கூடிய உலோகக் கழிவுகள் எனக் கூறி, பிரிட்டனிலிருந்து 111 சரக்குப்பெட்டகங்கள் அண்மையில் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.
    எனினும், இலங்கை துறைமுகத்தில் அந்த சரக்குப்பெட்டகங்களைத் திறந்து பார்த்த அதிகாரிகள் அதில் பிளாஸ்டிக் பொருள்கள், மெத்தைகள், மருத்துவமனை கழிவுகள் என ஆபத்தான பொருள்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    மேலும், அந்த சரக்குப்பெட்ட கங்களில் மனித உறுப்புகள் இருப்பதற்கான அறிகுறியாக துர்நாற்றம் வீசுவதாகவும் அதிகாரிகள் கூறினர். அதையடுத்து, அந்த 111 சரக்குப்பெட்டகங்களையும் பிரிட்டனுக்கே திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனர்.
    இந்த நிலையில், இலங்கைக்கு அனுப்பப்பட்ட சரக்குப்பெட்ட கங்களில் மனித உறுப்புகள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக பிரிட்டனின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சட்டவிரோதமாக கழிவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
    தவறான தகவலுடன் கழிவுப் பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமும் விதிக்க முடியும் என்றார்.
    இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தவில்லை என்றாலும், பிரிட்டன் அரசு தாமாகவே முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai