Enable Javscript for better performance
ஐ.எஸ். ஆதரவாளர்கள் நாடு திரும்ப தடை: ஆஸ்திரேலியா முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ஐ.எஸ். ஆதரவாளர்கள் நாடு திரும்ப தடை: ஆஸ்திரேலியா முடிவு

    By DIN  |   Published on : 25th July 2019 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    isis


    இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு, தற்போது சிரியா தடுப்பு முகாமில் இருக்கும் ஆஸ்திரேலிய பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் நாடு திரும்புவதற்கு தடை விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
    இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
    சிரியாவிலும், இராக்கிலும் சண்டையிட்டு வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அந்த நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் சென்றனர்.
    அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மனைவிகள் ஆகி, குழந்தைகளையும் பெற்றனர். தற்போது அந்த பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மனைவிகளாக இருந்த பெண்களும், அவர்களது குழந்தைகளும் சிரியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
    அவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 65,000 பெண்கள் மற்றும் குழந்தைகளில் சுமார் 50 பேர் ஆஸ்திரேலியர்கள் ஆவர்.
    இந்த நிலையில், தங்களது முகாம்களில் தங்கியுள்ள ஐ.எஸ். பெண்கள் மற்றும் குழந்தைகளை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு சிரியா அரசு வலியுறுத்தி வருகிறது.
    இந்த நிலையில், சண்டையில் கொல்லப்பட்ட இரு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் 8 மகன்கள் மற்றும் மகள்களை ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப அழைக்க முடிவு செய்திருப்பதாக கடந்த மாதம் அந்த நாட்டு அரசு அறிவித்தது.
    எனினும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதித்தால், அது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    இந்தச் சூழலில், சிரியா அகதிகள் முகாம்களிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை திரும்பப் பெறுவதை 2 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
    இதுதொடர்பான சட்ட மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai