Enable Javscript for better performance
சீனாவில் நிலச்சரிவு: 11 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    
    china

    சீனாவின் குய்ஷூ மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
    லியுபான்ஷுயி நகரில் செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் புதையுண்டன.
    நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்; மேலும் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்; 34 பேரைக் காணவில்லை.
    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன . மீட்புப் பணிகளில் 560 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai