Enable Javscript for better performance
பாகிஸ்தானில் 40 பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன: இம்ரான் கான்- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தானில் 40 பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன: இம்ரான் கான்

    By DIN  |   Published on : 25th July 2019 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Imran_Khan

    வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றும் இம்ரான் கான்.


    பாகிஸ்தானில் 40 பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
    அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இம்ரான் கான், நாடாளுமன்ற உறுப்பினரும் பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி.க்களுக்கான அமைப்பின் தலைவருமான ஷீலா ஜாக்ஸன் லீ வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
    அப்போது அவர் பேசியதாவது: அமெரிக்காவில் கடந்த 2001-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்போது ஆப்கானிஸ்தானில்தான் அந்தத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டது.
    பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள்கூட இருந்திருக்கவில்லை. அந்த தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா நடத்திய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் தன்னை இணைத்துக் கொண்டது.
    இருந்தாலும், தற்போது பாகிஸ்தானில் 40 பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, உள்நாட்டு பயங்கரவாதத்தை எதிர்த்து தீவிரமாகப் போரிட வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. இந்தச் சூழல் இல்லாமல் இருந்தால் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு பாகிஸ்தான் மேலும் பங்களிப்பு வழங்கியிருக்கும். எனினும், இந்த உண்மைகளை பாகிஸ்தானின் முந்தைய அரசுகள் அமெரிக்காவிடம் கடந்த 15 ஆண்டுகளாக மறைத்து வந்தன என்றார் இம்ரான் கான். பயங்கரவாதத்துக்கு எதிரான தங்களது போரில் போதிய ஒத்துழைப்பை பாகிஸ்தான் அளிக்கவில்லை என்று கூறி, அந்த நாட்டுக்கான ராணுவ நிதியுதவியை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai