Enable Javscript for better performance
பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    
    johnson

    பிரிட்டன் ராணி எலிசபெத்தை லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் புதன்கிழமை சந்தித்த போரிஸ் ஜான்சன்.


    பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் (55) புதன்கிழமை பதவியேற்றார். அவர் முன்பு வெளியுறவுத்துறை அமைச்சராகவும், லண்டன் நகர மேயராகவும் இருந்துள்ளார்.
    முன்னதாக, பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற போட்டியில் போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் பிரதமர் பதவியையும் ஏற்றுள்ளார்.
    முன்னதாக, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதையொட்டி பிரதமர் தெரசா மே ராஜிநாமா செய்தார். இதையடுத்து பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பதவியேற்றுள்ளார்.
    முன்னதாக, பிரிட்டன் ராணி எலிசபெத்தை அவரது லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் போரிஸ் ஜான்ஸன் சந்தித்தார். அப்போது, பிரதமர் பதவியேற்று, அமைச்சரவையை அமைக்குமாறு அவரிடம் ராணி கேட்டுக் கொண்டார். முன்னதாக தெரசா மே அளித்த ராஜிநாமா கடிதத்தை ஏற்பதாக ராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார்.
    பிரெக்ஸிட் பிரச்னைக்கு விரைந்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமரான பிறகு தனது முதல் உரையில் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். தொடர்ந்து நிதியமைச்சராக சஜீத் ஜாவித்தை போரிஸ் அறிவித்தார். ஜாவித் இதுவரை வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியில் டோமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார்.
    முன்னதாக, பிரிட்டன் பிரதமர் பதவிக்கான இறுதிச் சுற்றுப் போட்டியில் போரிஸ் ஜான்சனும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட்டும் இருந்தனர். கன்சர்வேடிவ் கட்சியினர் அளித்த வாக்குகளில் போரிஸ் ஜான்ஸனுக்கு 92,153 வாக்குகளும், ஜெரிமி ஹன்ட்டுக்கு 46,656 வாக்குகளும் கிடைத்தன. 
    இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், ஆளும் கட்சித் தலைவர் என்ற அந்தஸ்துடன் பிரிட்டன் பிரதமராகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai