Enable Javscript for better performance
மனித உரிமைகள் மீறல் விவகாரம் : நீதிபதிகளை ஐ.நா. தூதர் சந்திக்க இலங்கை நாடாளுமன்றம் தடை- Dinamani

சுடச்சுட

    

    மனித உரிமைகள் மீறல் விவகாரம் : நீதிபதிகளை ஐ.நா. தூதர் சந்திக்க இலங்கை நாடாளுமன்றம் தடை

    By DIN  |   Published on : 25th July 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parli

    இலங்கை நாடாளுமன்றம் (கோப்புப் படம்).


    இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிகட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதிகளை ஐ.நா. தூதர் சந்திப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.
    இலங்கையில், அந்த நாட்டு அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுச் சண்டை கடந்த 2009-ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.
    அப்போது நடைபெற்ற உச்சகட்ட சண்டையில் 40,000 தமிழர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இறுதிக் கட்டப் போரில் இரு தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐ.நா.வில் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலிறுத்தப்பட்டது.
    எனினும், இந்த விவகாரம் குறித்து சர்வேதேச விசாரணையை அனுமதிக்க முடியாது எனவும், இதுதொடர்பாக தாங்களாகவே விசாரணை நடத்தப்போவதாகவும் இலங்கை அரசு கூறியது.
    இந்த நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதிகளைச்  சந்தித்து, இதுதொடர்பான விவரங்களைப் பெறுவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் தூதர் கிளமென்ட் வோயூல் இலங்கை வந்துள்ளார்.
    எனினும், நீதிபதிகளை அவர் சந்திப்பது இலங்கை நீதித் துறை நடவடிக்கைகளில் அந்நியத் தலையீடு செய்வதாகும் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நாடாளுமன்றத்தில் ஆட்சேபம் எழுப்பினார்.
    அதையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்டு அத்தகைய சந்திப்பை தடுத்து நிறுத்திவிட்டதாக அவைத் தலைவர் கரு ஜெயசூர்யா புதன்கிழமை தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai