
ஹாங் காங்கில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 77 பேர் காயமடைந்தனர்.
ஹாங் காங்கில், தை லாம் சுரங்கப் பாதைக்கு வெளியே இரண்டு பேருந்துகள் இன்று காலை மோதி விபத்துக்குள்ளானது. இதில் 77 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து 15 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் இந்தப் பகுதியில் நடக்கும் மூன்றாவது விபத்து இதுவாகும்.