சீன இறக்குமதி பொருட்களுக்கு மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் வரி: மிரட்டும் ட்ரம்ப் 

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் (300 பில்லியன் டாலர்) வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன இறக்குமதி பொருட்களுக்கு மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் வரி: மிரட்டும் ட்ரம்ப் 

லண்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் (300 பில்லியன் டாலர்) வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு தத்தமது நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மிக அதிக அளவில் வரி விதித்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் (300 பில்லியன் டாலர்) வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள டெனால்டு டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

சீனா உடனான இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் (300 பில்லியன் டாலர்) வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது

அந்த முடிவானது சரியான நேரத்தில் செயல்படுத்தப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com