சுடச்சுட

    

    ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்: இலங்கை நாடாளுமன்றக் குழு விசாரணை தொடக்கம்

    By DIN  |   Published on : 12th June 2019 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lanka


    இலங்கையில் ஈஸ்டர் தினத்தின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமா? என்பது குறித்த நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
    அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்த விசாரணை தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
    ஈஸ்டர் தினத் தற்கொலைத் தாக்குதலுக்கு, அரசின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இருந்த குறைபாடுகள் காரணமா என்பது குறித்து நாடாளுமன்ற சிறப்புக் குழு  செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கியது.
    தொடக்கத்தில், இதுகுறித்து முஸ்லிம் தலைவர்களிடமிருந்து விளக்கங்கள் பெறப்பட்டன. அப்போது, மக்களிடையே மதவெறி தூண்டப்படுவது குறித்து ஏற்கெனவே அதிகாரிகளிடம் எச்சரிக்கை விடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
    மேற்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஆஸாத் சாலியை நாடாளுமன்றக் குழு நேரில் அழைத்து அவரிடம் விசாரணை நடத்தியது.
    முன்னதாக, இந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவை தலைவரான அதிபர் சிறீசேனா எதிர்ப்பு தெரிவித்தார்.
    அந்த விசாரணையை தடுத்து நிறுத்தாவிட்டால், இனி வரும் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
    இந்த நிலையில், அவரது எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றக் குழுவின் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai