சுடச்சுட

  
  J-R-Kulatunga


  இலங்கை உளவுத் துறை அமைப்பின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் ரூவன் குலதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
  இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில், பல இடங்களில் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்த்தினர். இந்தத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள், வெளிநாட்டினர் உள்பட 258 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றக் குழு நடத்திய விசாரணையில் ஆஜரான அப்போதைய உளவுத் துறை தலைவர்  சிஸிரா மெண்டிஸ், அதிபர் சிறீசேனா மீது குற்றச்சாட்டு தெரிவித்தார்.
  இதையடுத்து,  அவரை சிறீசேனா பதவி நீக்கம் செய்தார்.  அந்த பதவியில் மேஜர் ஜெனரல் ரூவன் குலதுங்காவை சிறீசேனா நியமித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai