
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொண்டார். அப்போது அவர் அந்த மாநாட்டின் நெறிமுறைகளை மீறி நடந்துகொண்ட விடியோ வைரலாகி வருகிறது.
மாநாட்டின் போது அங்கு வருகை தந்த இம்ரான் கான் நேரடியாக சென்று தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். இதனிடையே அம்மாநாட்டின் தலைவர் அங்கு வருகை தந்தார். அப்போது மீண்டும் எழுந்து மறுபடி அமர்ந்துகொண்டார்.
எஸ்சிஓ மாநாட்டில் இம்ரான் கான் கலந்துகொண்ட விடியோப் பதிவை அவரது பிடிஐ கட்சி வெளியிட்டுள்ளது. இதில் இக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த மாநாட்டில் அனைத்து தலைவர்களும் நின்றுகொண்டிருந்த சூழலில் இம்ரானின் நெறிமுறைகளை மீறிய இந்த செயல் அம்மாநாட்டு தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சவூதி அரேபியாவில் நடைபெற்ற இதே மாநாட்டின்போது சவூதி அரசர் தன்னிடம் பேச வந்தபோதும், இதேபோன்று இம்ரான் சென்று அமர்ந்துகொண்டார். இந்நிலையில், இம்ரான் கான் இதுபோன்று 2-ஆவது முறையாக நெறிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Prime Minister of #Pakistan @ImranKhanPTI's Arrival with other World Leaders at Invitation of President of Kyrgyzstan for Opening Ceremony 19th Meeting of the Council of the Heads of State of the Shanghai Cooperation Organization in Bishkek Kyrgyzstan (13.06.19)#SCOSummit2019 pic.twitter.com/fYdKYN3Fv7
— PTI (@PTIofficial) June 13, 2019