
சீனாவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அந்த நாட்டு பேரிடர் மீட்புப் படையனிர் கூறியதாவது: சுமார் 9,300 வீடுகள் வெள்ளத்தில் சேதமடைந்துவிட்டது. பல ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்தவிட்டது. சுமார் 4,300 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
குவான்க்ஸி ஷுவாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையால், அந்தப் பகுதியைச் சேர்ந்த 6 நகரங்கள் மற்றும் 32 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் 61 பேர் உயிரிழந்தனர்; 3.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அருகிலுள்ள குவாங்டாங் மாகாணத்திலும், மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G