எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: ஈரான் மீது சவூதி அரேபியாவும் குற்றச்சாட்டு

ஓமன் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம் என்று சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.
எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: ஈரான் மீது சவூதி அரேபியாவும் குற்றச்சாட்டு

ஓமன் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம் என்று சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கெனவே, அந்தச் சம்பவங்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வரும் நிலையில், தற்போது சவூதி அரேபியாவும் அதே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: முக்கியத்துவம் வாய்ந்த வளைகுடா கடல்வழித் தடத்தில், இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்களது நாட்டில் ஜப்பான் பிரதமர் ஷென்úஸா அபே மேற்கொண்ட நல்லெண்ணப் பயணத்தை துளியும் மதிக்காமல், ஈரான் அரசு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அவருடைய சமாதான முயற்சிக்குப் பரிசாக ஈரான் நடத்திய அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரு கப்பல்களில் ஒன்று ஜப்பானுக்குச் சொந்தமானதாகும்.
போரை விரும்பவில்லை: ஈரானுடன் போரிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும், எங்களது மக்களின் பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை ஆகியவற்றுக்கு ஈரான் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம் என்றார் முகமது பின் சல்மான். ஓமன் வளைகுடா பகுதியில் 4 எண்ணெய்க் கப்பல்கள் கடந்த மாதம் 12-ஆம் தேதி மர்மமான முறையில் தாக்குதலுக்குள்ளாகின. அவற்றில் 2 கப்பல்கள் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமானதாகும்.
இந்த நிலையில், அதே கடல் பகுதியில் ஜப்பானுக்குச் சொந்தமான ஓர் எண்ணெய்க் கப்பலும், நார்வேக்குச் சொந்தமான மற்றோர் எண்ணெய்க் கப்பலும் கடந்த வியாழக்கிழமை மர்மமான முறையில் தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களை ஈரான்தான் நடத்தியது என அமெரிக்கா ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், தற்போது சவூதி அரேபியாவும் அதே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.


அமெரிக்காவே தாக்கியிருக்கலாம்

டெஹ்ரான், ஜூன் 16: ஓமன் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா தாக்கியிருக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் அலி லரிஜானி கூறியதாவது: எங்கள் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால் அந்த நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்காத சூழலில், இந்த மர்மத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2-ஆம் உலகப் போரின்போது ஜப்பானில் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்துவதற்காக, அந்த நாடு அருகே அமெரிக்கா தங்கள் கப்பல்கள் மீது தாங்களே தாக்குதல் நடத்தியிருக்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com