ஜூலையில் ரஷியாவின் எஸ்-400 ஏவுகணைகள்: துருக்கி நம்பிக்கை

வரும் ஜூலை மாதத்திலிருந்து ரஷியாவின் அதிநவீன எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகள் தங்கள் நாட்டுக்கு அனுப்பப்படத் தொடங்கும் என்று துருக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிபர் எர்டோகன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "ஜூலை மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் ரஷியா தனது எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளை அனுப்பத் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.
தாக்க வரும் எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை தரையிலிருந்து பாய்ந்து இடைமறித்து அழிக்கும் அதிநவீன எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை ரஷியாவிடமிருந்து வாங்க துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும், அந்த ஒப்பந்ததைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துவிட்டார். அதற்குப் பதிலடியாக, துருக்கிக்கான தனது அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்களின் விற்பனையை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், அதிபர் எர்டோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com