ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் விரைகிறார் பிரதமர் மோடி 

ஜப்பானில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் விரைகிறார் பிரதமர் மோடி 

புது தில்லி: ஜப்பானில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் வருகிற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்

இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி- 20  நாடுகளின் பிரதமர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் மோடி ஜூன் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலகத்த தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com