சுடச்சுட

  
  bomba

  சவூதி அரேபியா மன்னர் சல்மானை சந்தித்து பேசும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ .


  சவூதியில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, அந்நாட்டு மன்னர் சல்மானை சந்தித்துப் பேசினார்.
  ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், சவூதி அரேபியாவில் மைக் பாம்பேயோ திங்கள்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சவூதி மன்னர் சல்மானிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் உடனும் பாம்பேயோ பேச்சுவார்த்தை நடத்தினார்.
  ஈரானுடன் பகைமைப் போக்கு நிலவி வரும் சூழலில், பாம்பேயோவின் சவூதி அரேபிய சுற்றுப்பயணம் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. முன்னதாக, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பாம்பேயோ கூறுகையில், ஈரான் விடுக்கும் சவால்களைச் சமாளிக்க சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரக நாடுகளும் அமெரிக்காவுக்குத் துணையாக இருக்கின்றன. ஈரானுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து அந்நாடுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். மேலும், ஈரான் பிரச்னை தொடர்பாக உலகளாவிய கூட்டணி அமைப்பது குறித்து ஆசியா மற்றும் ஐரோப்பாவிலுள்ள நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai