சுடச்சுட

  

  ரத்தாகிறது குடியுரிமை; நாடு கடத்தப்படுகிறாரா மெஹுல் சோக்சி? 

  By DIN  |   Published on : 25th June 2019 08:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Mehul_Choksi

   

  புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்டு தற்போது ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியுள்ள பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெஹுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். மோசடி பற்றிய தகவல்கள் வெளிவரும் முன்னரே இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணை தற்போது மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடக்கிறது

  இதனிடையே மெஹுல் சோக்சி, மேற்கிந்திய தீவு நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் குடியுரிமைபெற்று பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவரது ஆண்டிகுவா குடியுரிமையை ரத்து செய்து, அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு துவக்கியது.

  இந்நிலையில் மெஹுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  இதுதொடர்பாக ஆண்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் முடிவு செய்துள்ளதாக உள்ளூர் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.  அதில்,  ”நிதி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட எந்த கிரிமினல்களுக்கும் ஆண்டிகுவாவில் அடைக்கலம் கொடுக்க விரும்பவில்லை. சட்ட ரீதியில் வழக்கு தொடர சோக்ஷிக்கு அனுமதி கொடுக்கப்படும்.  சட்ட நடவடிக்கைகள் முடிந்த பின்னர், அவர் நிச்சயம் நாடு கடத்தப்படுவார்” என்று அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai