அமெரிக்க பொருளாதார தடைகளால் பாதிப்பில்லை: ஈரான்

அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஈரான் தெரிவித்துள்ளது. 


அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஈரான் தெரிவித்துள்ளது. 
அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானத்தை ஈரான் கடந்த வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தியதையடுத்து, அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டார். எனினும், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றார். இந்தச் சூழலில், ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அறிவித்தது.
இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மௌசவி, டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் தொடர்பாக எங்களுக்கு உண்மையாகவே எதுவும் தெரியாது. அவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதால், அவற்றை நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றார்.
ஈரான் அதிபரின் ஆலோசகர் ஹெசாமுதீன் ஆஷ்னா, சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், தொடர் அச்சுறுத்தல், தடைகளுக்கு மத்தியில், நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. இதனை எப்படி ஏற்க முடியும்? போரையும், பொருளாதார தடைகளையும் நாணயத்தின் இருபக்கங்களாகவே நாங்கள் கருதுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com