வெனிசூலா உள்விவகாரத்தில் தலையீடு: அமெரிக்கா மீது ரஷியா குற்றச்சாட்டு

வெனிசூலாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா வெளிப்படையாக தலையீடு செய்வதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

வெனிசூலாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா வெளிப்படையாக தலையீடு செய்வதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோவுடன், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தொலைபேசியில் சனிக்கிழமை உரையாடினார். 
அப்போது, நிவாரண உதவிகள் என்ற போர்வையில் வெனிசூலா அரசியலில் செல்வாக்குப் பெற நினைப்பது எந்த விதத்திலும் ஜனநாயகத்தை வளர்க்காது என்று அமைச்சர் லாவ்ரோவ் கூறினார்.
வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவின் சட்டப்பூர்வ அரசைக் கவிழ்க்க அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சி, இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் வெளிப்படையாக தலையிடும் செயலாகும். இதன் மூலம் அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வெனிசூலாவுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து தர தயாராக இருப்பதாகக் கூறிய அமைச்சர் லாவ்ரோவ், இதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வெனிசூலாவுக்கே உள்ளதாகக் கூறினார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com