நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவருக்கு வெனிசூலாவில் பிரம்மாண்ட வரவேற்பு

வெனிசூலாவில், ஆளுங்கட்சியின் எதிர்ப்பை மீறி வெளிநாடு சென்று வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோவை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அந்நாட்டு கொடியசைத்து திங்கள்கிழமை வரவேற்றனர். 
வெனிசூலா தலைநகர் கராகஸில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் குவாய்டோ. உடன், அவரது மனைவி ஃபாபியானா.
வெனிசூலா தலைநகர் கராகஸில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் குவாய்டோ. உடன், அவரது மனைவி ஃபாபியானா.

வெனிசூலாவில், ஆளுங்கட்சியின் எதிர்ப்பை மீறி வெளிநாடு சென்று வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோவை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அந்நாட்டு கொடியசைத்து திங்கள்கிழமை வரவேற்றனர். 
இதைதொடர்ந்து, தன்னை வரவேற்க வந்த மக்கள் மத்தியில் குவாய்டோ பேசியதாவது: ஆளுங்கட்சியை எதிர்ப்பதால் எழக்கூடிய பிரச்னைகள் என்ன என்பதை நான் நன்கு அறிவேன். அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நன்கு அறிவேன். நம்மை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பிராந்தியமே சர்வாதிகார ஆட்சியின் பிடியில் உள்ளது என்பதையும், இந்த ஆட்சியை 50க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன என்பதையும் ஆளுங்கட்சி உணரவில்லை.  நாம் மற்றவர்களை விடவும் வலுவானவர்கள்தான் என்பதை நம்முடைய அணி திரட்டி இங்கு நிரூபிப்போம் என்றார். 
முன்னதாக,  அவரது ஆதரவாளர்கள், ஊடகங்கள், தூதர்கள் என கராகாஸ் சர்வதேச விமானநிலையம் முன்பு  ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம், பெருமளவில் திரண்டு வந்திருந்தது. 
இதைத்தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூராவுக்கு எதிராக சனிக்கிழமை மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் குவாய்டோ அறிவித்தார். 
"சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் மடூராவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அப்புறப்படுத்தும் வரையிலும், வெனிசூலா நகரின் வீதியில் இறங்கி போராடுவோம். மீண்டும் சுதந்திரம் கிட்டும்வரை நாம் ஓய்வின்றி நாம் உழைக்க வேண்டும்' என்றும் குவாய்டோ தெரிவித்தார். 
அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவாய்டோவின் பாதுகாப்புக்கு மடூராவே பொறுப்பேற்ற வேண்டும். அவருக்கு எதிராக ஏதேனும் அச்சுறுத்தல், வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டால் அதற்கு மடூராவே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
முன்னதாக 10 தினங்களுக்கு முன்பு வெனிசூலாவை விட்டு, கொலம்பியா, பிரேசில், ஆர்ஜெண்டீனா, பாராகுவே மற்றும் ஈகுவெடார் போன்ற நாடுகளுக்கு சென்ற குவாய்டோ வெனிசூலாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுக்க மனிதாபிமான அடிப்படையில் அவசர உதவிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார். 
ஆனால், குவாய்டோ வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என மடூரா அரசு தடை விதித்திருந்தது. அதற்கு சர்வதேச அளவில் பிறநாடுகளும் மடூரா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதையும் மீறியே குவாய்டோ வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com