Enable Javscript for better performance
பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு ஈரான் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு ஈரான் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 11th March 2019 02:03 AM  |   அ+அ அ-   |    |  

    தங்களது மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
     ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலுசிஸ்தானில் கடந்த மாதம் 13-ஆம் தேதி அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தற்கொலை படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். 27 வீரர்களை பலி கொண்ட இத்தாக்குதலுக்கு, ஜெய்ஷ் அல்-அடில் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
     பாகிஸ்தானைச் சேர்ந்த தற்கொலைப் படை பயங்கரவாதிதான், இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்தது. மேலும், ஜெய்ஷ் அல்-அடில் இயக்கத்தின் பெருமளவிலான முகாம்கள் பாகிஸ்தானில்தான் உள்ளன; ஜிகாதி குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும், உளவு அமைப்பும் பாதுகாப்பு அளித்து வருகின்றன என்றும் குற்றம்சாட்டியது.
     இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன், ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி தொலைபேசி மூலம் சனிக்கிழமை இரவு பேசினார். அப்போது, ஈரானுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்ரானிடம் ரௌஹானி வலியுறுத்தினார்.
     இதுதொடர்பாக ஈரான் அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
     பாகிஸ்தான், ஈரான் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவும் சகோதரத்துவமும் நிலவி வருகிறது. இது, பயங்கரவாத குழுக்களால் சீர்குலைக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. பயங்கரவாத குழுக்களுக்கு எங்கிருந்து நிதியும் ஆயுதங்களும் கிடைக்கின்றன என்பது நமது இரு நாடுகளுக்குமே தெரியும் என்று பாகிஸ்தான் பிரதமரிடம் அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
     மேலும், ஜிகாதி குழுக்களுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவளிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் குற்றம்சாட்டி வருவதையும் ஹசன் ரௌஹானி சுட்டிக் காட்டியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp