பாலியல் வழக்கு: கத்தோலிக்க பாதிரியாருக்கு 6 ஆண்டுகள் சிறை

சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கத்தேலிக்க பாதிரியார் ஜார்ஜ் பெல்லுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.


சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கத்தேலிக்க பாதிரியார் ஜார்ஜ் பெல்லுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பாலியல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள மிக மூத்த கத்தோலிக்க பாதிரியாரான இவர், கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஃபிரான்சிஸுக்கு முதுநிலை ஆலோசகராகப் பொறுப்பு வகித்தவர்.
கத்தோலிக்க தலைமையகமான வாடிகனின் இசைக் குழுவில் இடம் பெற்றிருந்த இரு சிறுவர்கள் மீது கடந்த 1990-ஆம் ஆண்டுகளின் இறுதியில் பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஜார்ஜ் பெல் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவருக்கு தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜ் பெல்லின் பாலியல் தாக்குதலுக்குள்ளான சிறுவர்களின் வாழ்க்கையில் அந்தச் சம்பவம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக தண்டனையை அறிவித்த நீதிபதி பீட்டர் கிட் தெரிவித்தார்.
மேலும், ஜார்ஜ் பெல்லுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com