சுடச்சுட

  
  neomi1


  அமெரிக்காவின் கொலம்பியா மாகாண முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீதிபதி நியோமி ஜெஹாங்கிர் ராவ் (45) நியமிக்கப்பட்டுள்ளார்.
  அந்த நாட்டின் பலம் வாய்ந்த நீதிமன்றங்களில் ஒன்றான மாகாண முறையிட்டு நீதிமன்றத்தில் அவரை நியமிப்பதற்காக செனட் சபையில் புதன்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
  அதில், அவரது நியமனத்துக்கு ஆதரவாக 53 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து, கொலம்பியா மாகாண முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
  ஏற்கெனவே, அந்தப்  பதவியில் வகித்து வந்த பிரெட் கவானா உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.
  பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான அவர், கடும் சர்ச்சைக்கிடையே அந்தப் பதவியை ஏற்றதைத் தொடர்ந்து காலியான பதவிக்கு, நியோமி ராவின் பெயரை டிரம்ப் பரிந்துரைத்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai