சுடச்சுட

  

  நியூசிலாந்த்: நூலிழையில் உயிர்தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்!

  By DIN  |   Published on : 15th March 2019 02:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  NewZealand

  நியூசிலாந்த்: நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் நகரில், ஹாக்லே பூங்கா அருகே உள்ள மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி அருகே மர்மநபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

  மர்ம நபர்கள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள், கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் தொழுகை நடத்த சென்றபோது அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து நூலிழையில் அனைவரும் உயிர்தப்பியுள்ளனர். 

  கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai