நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு

நியூசிலாந்தின் இருவேறு மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் பலியாகினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி தப்பியோடியிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
இது குறித்து பிரதமர் ஜேசிண்டா ஆர்டென் கூறுகையில், இன்று நியூசிலாந்து வரலாற்றின் கருப்பு தினம் என்று விவரித்துள்ளார்.

கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இருந்த மசூதிகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம், மிகக் கொடூரமான, நியாயப்படுத்த முடியாத வன்முறைச் சம்பவம் என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்திருப்பதாக நியூசிலாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கண்ணிவெடி ஒன்றையும் செயலிழக்க வைத்திருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com