நியூஸிலாந்து: நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் மீது மர்மநபர் தாக்குதல்

நியூஸிலாந்து அரசில் அமைச்சராகப் பதவி விகித்து வரும் ஜேம்ஸ் ஷா மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்குள்ள எம்பி-க்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸிலாந்து: நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் மீது மர்மநபர் தாக்குதல்


நியூஸிலாந்து அரசில் அமைச்சராகப் பதவி விகித்து வரும் ஜேம்ஸ் ஷா மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்குள்ள எம்பி-க்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸிலாந்து பசுமை கட்சியின் இணை நிறுவனர் ஜேம்ஸ் ஷா. மத்தியில் ஆட்சியில் உள்ள இடதுசாரி கூட்டணியில் பசுமை கட்சி அங்கம் வகிக்கிறது. நியூஸிலாந்து அரசில் ஜேம்ஸ் ஷா பருவநிலை மாற்ற அமைச்சராக உள்ளார். இவர் நாடாளுமன்ற வாளாகத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபரால் தாக்கப்பட்டார். ஜேம் ஷாவின் முகத்தில் அந்த நபர் ஓங்கி குத்தியதில் அவரது கருவிழி பாதிப்புக்குள்ளானது.
தாக்குதலில் நிலைகுலைந்த ஷாவை பொதுமக்கள் இருவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதலுதவி சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து கலந்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து வர்த்தகத் துறை அமைச்சர் டேவிட் பார்க்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ஜேம்ஸ் ஷாவை தாக்கிய நபர் ஐ.நா. சபை தொடர்பான சில விஷயங்கள் குறித்து கோஷமிட்டுள்ளார் என்றார்.
அமைச்சர் ஜேம்ஸ் ஷா தாக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 47 வயது நபரை கைது செய்துள்ள போலீஸார், அவர் மீது உள்நோக்கத்துடன் காயத்தை ஏற்படுத்துதல் குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com