யேமன் போரில் அமெரிக்க ஆதரவை முடிவுக்கு கொண்டு வர செனட் ஒப்புதல்

யேமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அமெரிக்காவின் ஆதரவை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல் தெரிவித்துள்ளது.


யேமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அமெரிக்காவின் ஆதரவை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
யேமனில் பயங்கரவாதிகளுக்கு எதிராக சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் போரிட்டு வருகின்றன. இந்த கூட்டணியில் அமெரிக்காவும் இடம்பெற்றுள்ளது. யேமனில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்ற முடிவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், பெரும்பாலான எம்பி-க்களும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. யேமன் உள்நாட்டுப் போரில் சவூதி தலைமையிலான கூட்டுப் படைகளுக்கு தனது ஆதரவு தொடரும் என டிரம்ப் தெரிவித்து வருகிறார். 
இந்த நிலையில், யேமன் போரில் அமெரிக்க ஆதரவை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான தீர்மானத்தின் மீது செனட் சபையில் புதன்கிழமை  வாக்கெடுப்பு நடைபெற்றது. 
இந்த வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 54 பேரும், எதிராக 46 பேரும் வாக்களித்தனனர். அதில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்பி-க்கள் டிரம்பின் யேமன் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவருக்கு எதிராகவே வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்ககது.
செனட் சபை வாக்கெடுப்பில் தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து, யேமன் போர் முனையிலிருந்து அமெரிக்க படைகளை 30 நாள்களுக்குள் திரும்ப அழைக்க வேண்டிய கட்டாயம் டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் அதிபருக்கான வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை  கூறியுள்ளது. 
யேமனில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது என்பது பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடும் அமெரிக்காவின் திறனை பாதிக்கும் என்பதுடன், அந்தப் பிராந்தியத்தில் இருதரப்பு உறவுகளுக்கும் தீங்கு விளைவிப்பதாக அமையும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com