சுடச்சுட

  
  Christchurch_terror_attack

   

  நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 49 பேர் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த காயமடைந்தனர்.

  இந்நிலையில், நியூஸிலாந்தில் இருந்த 9 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நியூஸிலாந்தில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த சம்பவத்திற்குப் பின் 9 இந்தியர்கள் மாயமாகிவிட்டதாக நியூஸிலாந்திற்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி தெரிவித்துள்ளார். அவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவோ, வம்சாவளியினராகவோ இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai