அமைதி நிறைந்த வளர்ச்சி பாதையில் சீனா பயணிக்கும்:  பிரதமர் லீ கெகியாங் உறுதி

அமைதி நிறைந்த வளர்ச்சிப் பாதையில் பயணித்து, உலக மற்றும் பிராந்திய அமைதியை மேம்படுத்துவதில் சீனா முக்கியப் பங்கு வகிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அமைதியான வளர்ச்சிப் பாதையில் சீனா தொடர்ந்து பயணிக்கும். ஆக்கப்பூர்வமான நாடாகவும், உலக மற்றும் பிராந்திய அமைதியை மேம்படுத்துவதில் முக்கிய நாடாகவும் சீனா விளங்கும். அமெரிக்காவில் உள்ள சீன நிறுவனங்களிடம் அந்நாட்டை வேவு பார்க்குமாறு சீனா என்றும் வலியுறுத்தியது இல்லை. சீனா ஒருபோதும் அவ்வாறு நடந்துகொண்டது கிடையாது. வருங்காலத்திலும் அவ்வாறு நடந்துகொள்ளாது.
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் பலன் கிடைக்கும் நோக்கில், இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் நல்லுறவையும், பரஸ்பர நம்பிக்கையையும், மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் மனதில்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com