சுடச்சுட

  

  வெனிசூலா: பொதுத் துறை கட்டமைப்புகளை பாதுகாக்க தனி ராணுவப் படை

  By DIN  |   Published on : 17th March 2019 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெனிசூலாவில் மின் நிலையங்கள் போன்ற பொதுத் துறை கட்டமைப்புகளைப் பாதுகாக்க தனி ராணுவப் படையை அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ அமைத்துள்ளார்.
   மேலும், அரசு வலைதளங்களில் இணையதளம் மூலம் அமெரிக்கா ஊடுருவுவதாகக் குற்றம் சாட்டிய அவர், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.
   இதுகுறித்து வானொலி ஒன்றுக்கு மடூரோ அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: மின் உற்பத்தி, குடிநீர் விநியோகம் போன்றவற்றை மேற்கொள்ளும் பொதுத் துறை கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும், அவை தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யவும் ராணுவத்தின் சிறப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளோம். அந்த அமைப்புகளின் பராமரிப்பையும் அந்தப் பிரிவே கவனித்துக் கொள்ளும். மேலும், நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பொதுத்துறை கட்டமைப்புகளுக்கு வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பொறுப்பு சிறப்பு ராணுவப் படையின் அதிகாரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
   வெனிசூலாவின் பொதுத் துறை கட்டமைப்புகளில், குறிப்பாக பொலிவர் மாகாணம், குரியிலுள்ள நீர் மின் நிலையத்தின் வலைதளத்தில் தொடர்ந்து இணைதளம் மூலம் ஊடுருவல் தாக்குதல் நடத்தப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டனின் யோசனையின்படி அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றார் அவர்.
   அரசியல் பதற்றம் நீடித்து வரும் வெனிசூலாவில் இந்த மாதம் 7-ஆம் தேதி முதல் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், நிலைமை சரி செய்யப்பட்டுவிட்டதாக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தாலும், நாட்டின் மேற்குப் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டுப் பிரச்னை நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோதான் காரணம் என்று குற்றம் சாட்டும் அதிபர் நிக்கோலஸ் மடூரோ, அவருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதாகக் கூறி வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai