இந்தோனேஷியா வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை திங்கள்கிழமை அதிகரித்துள்ளது.
இந்தோனேஷியா வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை திங்கள்கிழமை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் சுடோபோ பூர்வோ நுக்ரோஹோ ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பப்புவா மாகாணத் தலைநகர் ஜெயபுராவுக்கு அருகே உள்ள சென்டானி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு சனிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்றார். 

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 43 பேர் மாயமாகியுள்ளனர். 41 பேருக்கு படுகாயம் மற்றும் 75 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 4,728 பேர் தங்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com