தலாய் லாமாவின் அடுத்த வாரிசு: தங்களிடம் அனுமதி கோர சீனா அறிவுறுத்தல்

 தலாய் லாமாவின் அடுத்த வாரிசு குறித்த அறிவிப்பு சீனாவின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என அந்நாடு தெரிவித்துள்ளது.
தலாய் லாமாவின் அடுத்த வாரிசு: தங்களிடம் அனுமதி கோர சீனா அறிவுறுத்தல்


 தலாய் லாமாவின் அடுத்த வாரிசு குறித்த அறிவிப்பு சீனாவின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என அந்நாடு தெரிவித்துள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தலாய் லாமா (83), தனது மறைவுக்குப் பிறகு வாரிசாக இந்தியாவைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மறுபிறவி அல்லது மறுஅவதாரம் என்பது திபெத் புத்தமதத்தின் தனித்துவமான வழி. அது நிலையான மத சடங்குகளையும், அமைப்பு முறையையும் கொண்டது. மத நம்பிக்கை சுதந்திரத்துக்கென சீன அரசிடம் கொள்கை உள்ளது. எனவே, திபெத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் புத்தமத வழிபாட்டில்,  மதப் பற்று மற்றும் மறு அவதாரத்துக்கென்று சில கட்டுப்பாடுகளை சீன கொண்டுள்ளது.
அந்த வகையில், தலாய் லாமாவின் அடுத்த அவதாரம் குறித்த அறிவிப்புக்கு சீனா அங்கீகாரத்தை வழங்க வேண்டும். 
அப்படி இல்லையெனில் அந்த அறிவிப்புக்கு சீனா மதிப்பளிக்காது என்றார் அவர்.
திபெத் புத்தமதத் தலைவராக அறியப்பட்ட தலாய் லாமா சீனாவின் நெருக்கடியால் கடந்த 1959-ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி வந்து இந்தியாவில் அடைக்கலமானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com