மசூதி தாக்குதல் நடத்தியவருக்கு மிகக் கடுமையான தண்டனை: நியூஸிலாந்து பிரதமர் உறுதி

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தரும் வகையில், அவர் மீது முழுவீச்சில் சட்டப்
மசூதி தாக்குதல் நடத்தியவருக்கு மிகக் கடுமையான தண்டனை: நியூஸிலாந்து பிரதமர் உறுதி


நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தரும் வகையில், அவர் மீது முழுவீச்சில் சட்டப் பிரயோகம் செய்யப்படும் என்று அந்த நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து, அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்றத்தில் அவர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
கிறைஸ்ட்சர்ச் மசூதிகளில் தாக்குதல் நடத்தியவர் மீது நியூஸிலாந்தின் சட்டம் முழுவீச்சில் பிரயோகிக்கப்பட்டு, அவருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவது உறுதி செய்யப்படும்.
இந்தச் செயல் மூலம் தனது பெயர் பிரபலமடையும் என்று தாக்குதல் நடத்திய நபர் எதிர்பார்த்துள்ளார். எனினும், அந்த நோக்கத்தை அவர் அடைய நாம் இடம் கொடுக்கக் கூடாது. எனவே, எனது உரையில் ஒருபோதும் அவரது பெயரை உச்சரிக்க மாட்டேன்.
அவர் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி, இன வெறியர்; அதைத் தவிர அவருக்கு வேறு பெயரில்லை என்றார் பிரதமர் ஜெசிந்தா.
நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வந்த பிரதமர் ஜெசிந்தா, தனது இரங்கல் உரையில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் அரேபிய வசனங்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில், 28 வயது நபர் கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இனவெறி,     குடியேற்றவாசிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு காரணமாக நடத்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 இந்தியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com