வர்த்தகப் பேச்சுவார்த்தை: அமெரிக்க அதிகாரிகள் மார்ச் 28-இல் சீனா வருகை

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரைத் தவிர்க்கும் நோக்கில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள, அமெரிக்க அதிகாரிகள் வரும் 28-ஆம் தேதி, சீனாவுக்கு வருகை தர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
வர்த்தகப் பேச்சுவார்த்தை: அமெரிக்க அதிகாரிகள் மார்ச் 28-இல் சீனா வருகை


அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரைத் தவிர்க்கும் நோக்கில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள, அமெரிக்க அதிகாரிகள் வரும் 28-ஆம் தேதி, சீனாவுக்கு வருகை தர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இருநாடுகளுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில், தொழில்துறை கொள்கை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை சீனாவிடம்  அமெரிக்கா முன்வைப்பதால், இறுதிக்கட்ட ஒப்பந்தத்தை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சீன வர்த்தகத் துறை செய்தித் தொடர்பாளர் காவோ ஃபெங் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், வரும் 28-29 ஆகிய தேதிகளில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லைதிùஸர், கருவூல செயலாளர் ஸ்டீவன் நூசின் ஆகியோர் சீனா வருகை தருகின்றனர். இதையடுத்து, வர்த்தகப் பேச்சுவார்த்தையைத் தொடரும் நோக்கில், சீன துணைப் பிரதமர் லியூ ஹி தலைமையிலான குழு, அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளது என்றார்.
அமெரிக்காவும் சீனாவும் ஒருவர் மீது ஒருவர் இறக்குமதி வரிகளை விதித்துக் கொண்டதால், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் ஏற்படும் சூழல் காணப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கப் பொருள்களின் மீதான இறக்குமதி வரியை சீனா குறைக்கவில்லை எனில், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் ரூ.1,40,000 கோடி மதிப்பிலான பொருள்கள் மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், வர்த்தக ஒப்பந்தத்துக்கு சீனா ஒத்துழைப்பு அளிக்குமா? என்பதை ஆராய வேண்டியுள்ளது. தற்போது வரை பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. 
ஆனால், முறையான ஒப்பந்தத்துக்கு சீனா ஒத்துழைக்காவிட்டால், அந்நாட்டுப் பொருள்களின் மீதான இறக்குமதி வரி, காலவரையின்றி அமலில் இருக்கும் என்று  எச்சரித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com