சீனாவில் சுற்றுலா பேருந்தில் தீவிபத்து: 26 பயணிகள் உயிரிழப்பு

சீனாவில் சுற்றுலா பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 பயணிகள் உயிரிழந்தனர். 
சீனாவில் சுற்றுலா பேருந்தில் தீவிபத்து: 26 பயணிகள் உயிரிழப்பு

சீனாவில் சுற்றுலா பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 பயணிகள் உயிரிழந்தனர். 

சீனாவில் ஹூனான் மாகாணத்தில் 53 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்து நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் 26 பயணிகள் உயிரிழந்தனர்.

காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுனர் 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com