மொசாம்பிக்: சூறாவளியால் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது

மொசாம்பிக் நாட்டை இடாய் சூறாவளி புயல் தாக்கியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் பிலிப்
மொசாம்பிக்: சூறாவளியால் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது


மொசாம்பிக் நாட்டை இடாய் சூறாவளி புயல் தாக்கியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் பிலிப் நியூஸி தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர்.  
தென் ஆப்ரிக்க நாடுகளான மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி நாடுகளை இடாய் புயல் தாக்கியதில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மொசாம்பிக் நாட்டில் மட்டும் புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என அஞ்சப்படுகிறது. புயலால் நிலை குலைந்து போயுள்ள மொசாம்பிக் நாட்டிற்கு ஐ.நா.அமைப்புகளும், செஞ்சிலுவைச் சங்கமும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அந்த அமைப்புகள் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்களையும், மருந்துகளையும் விநியோகித்து வருகின்றன.  
அங்கு வீடுகள், வீதிகளில் வெள்ள நீரால் சூழ்ந்தும், மக்கள் தங்கள் உடமைகளை இழந்தும் தவிக்கின்றனர். விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. 
பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், வீடுகள் கடும் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் தங்களது உடமைகளை முற்றிலும் இழந்து மீட்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com